சித்திரை திருவிழா நீலகண்டபிள்ளையார் கோயிலில் இன்று தேரோட்டம்

பேராவூரணி, ஏப்.18: பேராவூரணி நீலகண்டபிள்ளையார்கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது. விழாவையொட்டி நேற்று பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பேராவூரணியில்  பிரசித்தி பெற்ற நீலகண்டப்பிள்ளையார் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை  திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு சித்திரை திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. நேற்று கோயிலுக்கு பேராவூரணி அருகே உள்ள  ஆதனூரை சேர்ந்த பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து  வந்து நேத்திகடன் செலுத்தினார். பேராவூரணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பறவை காவடியை பார்த்து பக்தி பரவசமடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: