கும்பகோணம்,திருவிடைமருதூர் வாக்குசாவடி மையங்களுக்கு 1000 போலீசார் பாதுகாப்பு பணி

கும்பகோணம், ஏப்.18: மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் ராமலிங்கம், அதிமுக சார்பில் ஆசைமணி மற்றும் பல்வேறு கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் 27 பேர் போட்டியிடுகின்றனர். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,25,377 ஆண் வாக்காளர்களும், 1,29,554 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 3 பேர் உள்ளனர். இந்த தொகுதியிலுள்ள 287 வாக்கு சாவடிகளுக்கு  342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வீராசாமி தலைமையில் நேற்று சுமார் 2,644 அலுவலர்களுடன் அந்தந்த வாக்கு சாவடிமையங்களுக்கு லாரி மூலம் பலத்த போலீசார் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோல் திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதியில் 1,20,701 ஆண் வாக்காளர்களும், 1,20,079 பெண் வாக்காளர்களும்,  மற்றவர்கள் 14 பேர் உள்ளனர். இந்த தொகுதியிலுள்ள 291 வாக்குசாவடிகளுக்கு  337 இயந்திரங்களும், நேற்று தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயபாரதி தலைமையில் சுமார் 2,129 அலுவலர்களுடன் அந்தந்த வா்க்குசாவடி மையங்களுக்கு லாரி மூலம் பலத்த போலீசார் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

கும்பகோணம் ,திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதிகளுக்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் , மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Related Stories: