புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு 1008 பால்குட திருவிழா

தஞ்சை, ஏப். 18: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்று பக்தர்கள் ேநர்த்திக்கடன் செலுத்தினர்.தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பிராமணர் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் பால்குடம் எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறும். இதன்படி தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. 1,008 குடங்களில் பால் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் மேலவீதி, வடக்குவீதி என்று முக்கிய வீதிகள் வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. இதைதொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சகல ஆபரண அலங்காரத்துடன் அம்பாள் புறப்பாடு நடந்தது.

Related Stories: