ஒரத்தநாட்டில் மானியத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர்

ஒரத்தநாடு, ஏப்.18: ஒரத்தநாட்டில் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார உதவி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் நடந்தது. தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு பொய்யுண்டார்கோட்டை உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5,00,000 மானியத்திற்கான டிராக்டரை வழங்கினார். தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குனர் பேசுகையில், கஜா புயல் மறுவாழ்வாதார தொகுப்பு திட்ட ஈடு பொருள் விநியோகம், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் வழங்க பதிவு செய்தல்,கூட்டு பண்ணைய திட்டத்தில் டிராக்டர் விநியோகம் குழு பதிவு செய்தல் போன்ற திட்டங்களை உதவி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு விரைவாக  செயல்பாடுகளை கொடுத்து பணியாற்றுவார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அதிகாரிகள்  பிரபாகர், செல்வராசு, மகாலிங்கம, வெங்கடாசலம, கணேசன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: