அயனாவரத்தில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கீழ்ப்பாக்கம்: அயனாவரத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சென்னை அயனாவரம் ஏகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று காலை 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதுகுறித்து அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertising
Advertising

அதன்பேரில் போலீசாருடன் சென்று அங்கு பார்த்தபோது 17 வயது சிறுமிக்கு, அந்த வாலிபர் தாலிகட்ட முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக இரு வீட்டாரின் பெற்றோரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: