பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் அரவான் தேரோட்டம்

வில்லியனூர், ஏப். 18: வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் நடந்த அரவான் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வில்லியனூர் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மீனாட்சியம்மன் ஆராதனை, சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 13 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகளும், வேண்டுதல் செய்திருந்த ெபாதுமக்களும் கலந்து கொண்டு தாலி கட்டிக்கொண்டனர். இதையடுத்து நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். தொடர்ந்து நேற்று மாலையில் அழுகளம் நிகழ்ச்சி நடந்தது. மே 18ம் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரணி, துணை தலைவர் பத்மநாபன், செயலாளர் சரபாளன், பொருளாளர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் நாகப்பன், கணேஷ் உள்ளிட்டோர் ெசய்திருந்தனர். வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

× RELATED கோயிலை உடைத்து கொள்ளை முயற்சி