வாகனம் மோதி தொழிலாளி பலி

காங்கயம், ஏப். 17:  காங்கயம் அருகே ராசாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (45). தனியார் குளிர்பான கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து அங்குள்ள வட்டா முடக்கு பகுதியில் உள்ள ஒரு கடையில் வழக்கம்போல் டீ குடிக்க பைக்கில் சென்றுள்ளார். அப்போது, கோவை ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் சின்னசாமி பைக்கு மீது மோதியது. இதில்  படுகாயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னசாமி உடலை மீட்டனர்.

Advertising
Advertising

Related Stories: