அவிநாசி அருகே சிவளாபுரியம்மன் கோயில் குண்டம் விழா

அவிநாசி, ஏப். 17:  அவிநாசி தாலுகா நடுவச்சேரி கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோயில் தேவஸ்தானத்துக்குட்பட்ட சிவளாபுரியம்மன் கோயில் 33ம் ஆண்டு குண்டம் திருவிழா ஏப்.14ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதில் நேற்று (16ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு குதிரை உத்தரவு பெறுதல், அதிகாலை 3 மணிக்கு அம்மனுக்கு படைக்கலம் எடுத்து வருதல், அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டி பூசாரிகளும், வீரமக்களும் குண்டம் இறங்கினர். நாளை (17ம் தேதி) மறு பூஜை, மஞ்சள்நீர், சுவாமி திருவீதி உலாவருதல் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் லோகநாதன், விழா கமிட்டியினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: