கோவை வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி துவங்கியது

கோவை, ஏப். 17: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் துவக்கிவைத்தார். இப்பயிற்சி கோடை விடுமுறை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வரும் ஜூன் 3ம் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்களுக்கும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் 5 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். நீச்சல் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக அலுவலக எண் 0422-6611279, 94867-75495 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக மாணவர் நலத்திட்ட முதன்மையர் ரகுச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: