வெள்ளிங்கிரி மலையேறிய பக்தர் பலி

கோவை, ஏப். 17: கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட்ட பக்தர் உடல்நிலை குறைவு காரணமாக பலியானார். கோவை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு 7வது மலையில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். சித்திரை முதல் நாளில் ஏராளமானவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருச்சிராப்பள்ளி திருப்பெரும்பூர் பூலாங்குடி காலனியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் குமரேசன்(46) கடந்த 14ம் தேதி அதிகாலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டார். அவர், முதல் மலையான வெள்ளை விநயாகர் கோயில் அருகே சென்ற போது மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போளூவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குமரேசன் உடலை கைப்பற்றினர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: