இன்று முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

திருப்பூர், ஏப்.16:  மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று( 16ம் தேதி) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் தொடர் விடுமுறை திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில், எதிர்வரும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று (16ம் தேதி), (நாளை)17ம் தேதி மற்றும் 18ம் தேதி ஆகிய தினங்களுக்கு முழு நேரமும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தி உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: