திருப்பூர் சித்ரகுப்தர் கோயிலில் 29ல் சித்ரா பவுர்ணமி விழா

திருப்பூர், ஏப்.16:   திருப்பூர் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில், எமதர்மனின் கணக்கர் எனப்படும் சித்ர குப்தருக்கு, தனி கோயில் உள்ளது. இங்கு தலைப்பாகையுடன் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் பனை ஓலையுடன், கணக்கு எழுதும் கோலத்தில் சித்ர குப்தர் வீற்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ர குப்தர் கோயிலுக்கு அடுத்ததாக, இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சித்ரகுப்தர் அவதரித்த சித்ரா பவுர்ணமி நாளில், ஆண்டுதோறும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா வருகிற 18ம் தேதி மாலை 5 மணிக்கு, ஸ்ரீ சித்ரகுப்தர் திருவீதி உலா, பால்குட ஊர்வலம், அபிேஷகம், அலங்கார பூஜையுடன் துவங்குகிறது. வரும் 19ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ேஹாமம்,  சித்ரகுப்தர் சிறப்பு யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு, சித்ரகுப்தருக்கு 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: