வாட்ச்மேனை தாக்கிய வாலிபர் கைது

ஈரோடு, ஏப். 16:  ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (61). தனியார் நிறுவன வாட்ச்மேன். நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் செல்வராஜிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு செல்வராஜ் பணம் தர மறுத்ததால், அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து செல்வராஜ் ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் ஈரோடு பெரியார் நகர் குளத்துப்பண்ணை பகுதியை சேர்ந்த குணசேகரன் (28) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: