8 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடி மையம்

ஈரோடு, ஏப். 16:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 4 மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மக்களவை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில், 222 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வரும் 18ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள், பூத் ஏஜெண்டுகள் அமரும் இடம், வாக்காளர் வரும் இடம் ஆகியவை அமைக்கப்படும்.வாக்காளர்கள் வரும் வகையில் சிவப்பு கம்பளங்களும் விரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வரும் வகையில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 4 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் சூரம்பட்டி டீச்சர்ஸ் காலனியிலும், வில்லரசம்பட்டி, தண்ணீர்பந்தல்பாளையம், சித்தோடு ராயபாளையம் ஆகிய பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்துள்ளனர். இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை பொதுமக்கள் பார்த்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: