×

100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்

ஜெயங்கொண்டம், ஏப். 10: ஜெயங்கொண்டம்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிராஞ்சேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த  வாக்கை உறுதி செய்யும் கருவிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிலம்பூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு 100  சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்  வழங்கப்பட்டது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிரேசன் மற்றும்  அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...