×

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

அரியலூர்,ஏப்.10: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவை  தேர்தல் 2019-க்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும். பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் விஜயலட்சுமி,  பார்வையிட்டார். இதில் கலெக்டர் தெரிவித்ததாவது,மக்களவைபொதுத் தேர்தல் - 2019 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேப்பர் ஒட்டும் பணி நடைபெறுகிறது.

பேலட் பேப்பரில் 13 வேட்பாளர்கள் மற்றும் 1 நோட்டா என மொத்தம் 14 பெயர்கள் உள்ளது. இப்பணிகளை கவனிக்க பெல் நிறுவன பொறியாளர்கள் உள்ளார்கள். மேலும், அவர்கள் ஆய்வு செய்து முடித்த பின்னர் மீண்டும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். பின்னர், வாக்குப்பதிவுக்கு முன்தைய நாளான ஏப்ரல் 17ம் தேதி வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும் என கலெக்டர்  விஜயலட்சுமி, தெரிவித்தார்கள். இப்பயிற்சியில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, கலெக்டரின்  நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, தாசில்தார் குமரய்யா, மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : candidate ,district election officer ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்