×

தா.பழூர் காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

தா.பழூர், ஏப்.10: அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவலர் குடியிருப்பு பகுதி இருந்து வருகிறது. இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் உள்ள வாய்க்கால்களில் விடப்படுவதால் இவை தேங்கி நின்று வெளியேறாமல் துர்நாற்றம் வீசுவதோடு அருகில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் வசிக்க முடியாத வண்ணம் துர்நாற்றமும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சாலையில் செல்வோர் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்திக் கொண்டு செல்லக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது.காவலர் குடியிருப்பு வெளி பகுதியில் தண்ணீர் சாக்கடை  போல் தேங்கி கிடப்பதால் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கும் மலேரியா, டெங்கு, மலசிக்கல் போன்ற நோய்கள் ஏற்பட கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஆகையால் முறையான கழிவு நீர் தேக்க தொட்டி அமைத்து  அல்லது இந்த கழிவுநீர் சாலையில் வீடுகள் பகுதிகளுக்கு செல்லாமல் தடுத்து மாற்று ஏற்பாட்டை செய்யவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : guard house ,Thalur ,
× RELATED நோய் தொற்றை எதிர்கொள்ள சுகாதார...