×

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் கள ஆய்வு பயிற்சி

ஜெயங்கொண்டம், ஏப்.3: அரியலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் 2019-20 ம் கல்வி ஆண்டில் பள்ளிச் செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டறிவதற்கான களஆய்வு செய்வதற்கான பயிற்சி ஜெயங்கொண்டம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட உதவிதிட்ட அலுவலர் ராஜா தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களை கண்டறியும் விதம், மக்கள் தொகை கணக்கேடு புதுப்பித்தல், 6 முதல்18 வயது வரையுள்ள பள்ளிச் செல்லாக் குழந்தைகளையும், 18 வயதுவரை அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளையும் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறிவது குறித்த விவரங்களை தெரிவித்தார். பயிற்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆண்டிமடம் சங்கர், மற்றும் தா.பழூர் மேகநாதன் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் 100 % சிறப்பான முறையில் இந்த கள ஆய்வு சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என கூறினார். ஜெயங்கொண்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி கள ஆய்வு குறித்து விரிவாக கூறினார்.

Tags : school children ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்