×

நேரடி கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்வதாக விவசாயிகள் புகார்

அரியலூர், ஏப். 3: அரியலூர் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் டெல்டா பகுதி விவசாயிகள் புகார் மனு அளித்தனர். அதில் அரியலூர் மாவட்டம் திருமானூர், தா.பழூர் மற்றும் செந்துறை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கட்டாயமாக அதிகாரிகள் வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை திறந்த வெளியில் வைத்து தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. அதனால் நெல் மூட்டைகள் பனியிலும், வெயிலிலும் கிடந்து வீணாகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் விசாரனை செய்வதாக கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதைதொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி உடனடியாக அதிகாரிகளை அழைத்து நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்யுமாறு கூறினார். அதற்கு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து ஒவ்வொரு விவசாயிகளிடம் விசாரனை செய்து அறிக்கையை கலெக்டரிடம் ஒப்படைப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Rs ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...