×

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு

பரமக்குடி, மார்ச் 26: பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக., அதிமுக வேட்பாளர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் சண்.சம்பத்குமார் பரமக்குடி ஓட்டபாலம் பகுதியில் இருந்து வந்து, மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகரன், பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் வேளச்சேரி மனிமாறன், முன்னாள் எம்எல்ஏ திசைவீரன் ஆகியோர் தலைமையில் வேட்பு மனுவை பரமக்குடி கோட்டாசியர் ராமனிடம் மனு தாக்கல் செய்தார்.

அதிமுக  சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சதன்பிரபாகர், மாநில மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பாஜக., மாநில துணைத்தலைவர் பொன் பாலகணபதி,தமாகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கோட்டாய்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ் சமூக நலக்கூட்டணி சார்பாக சண்முக ராணி வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை ஒரு சுயேச்சை வேட்பாளர் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : DMK ,nominees ,AIADMK ,constituency ,Paramukudi Assembly ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...