×

வெடிப்புகளுடன் பெயர்ந்துள்ள கோரையாறு கீழ்கரை சிமென்ட் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்,மார்ச்26: நீடாமங்கலம் கோரையாறு கீழ்கரை  சிமெண்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி கோரையாறு வினாயகர் கோயிலிலிருந்து கோரையாறு கிழக்கு  கரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திமுக அட்சியின் போது சிமெண்ட் சாலை போடப்பட்டது.இந்த சாலை தற்போது நடுவில் பெரிய வெடிப்புகள் விட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.கோரையாற்றில் அதிக தண்ணீர் வந்து மழை பெய்தால் அப்படியே சரிந்து சாலை ஆற்றில் விழுந்து விடும் அபாயம் உள்ளத.இந்த சாலையிலிருந்து பாம்பளம்மன் கோயில் தெருவழியாக பெரியார் சிலைவரை கோரையாறு விநாயகர் கோயில்,பாம்பளம்மன் கோயில்,தனியார் உதவிபெரும் நடுநிலைப்பள்ளி,காஸ் அலுவலகம்,மற்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகள்,கடைகள் உள்ளன.

இந்த வழியாகவும் நீடாமங்கலம் ரயில்வே ஜங்கனுக்கும் செல்லலாம்.இந்த சாலை கோரையாறு கீழ்கரை வரை மோசமான சிமெண்ட் சாலையும் பாம்பளம்மன் கோயிலிலிருந்து பெரியார் சிலைவரை மோசமான கப்பி சாலையும் உள்ளது.இரவு நேரங்களில் சாலையின் வெடிப்புகளில்  விஷஜந்துகள் போன்றவைகள் நடமாடும் சாலையாக உள்ளதால் குழந்தைகள்,மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்ட் மற்றும் கப்பி சாலைகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : explosions ,cement road ,
× RELATED ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு...