×

மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, மார்ச்26: வாக்களிப்பதன் அவசியம் மற்றும்  100 சதவீத வாக்கு  பதிவை வலியுறுத்தி  மன்னார்குடியில்  வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடியில் நகராட்சி மற்றும் தாசில்தார்  அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. முன்னதாக ராஜகோபால சுவாமி கோயில் அருகிலிருந்து நடை பெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு  தேர்தல் உதவி அலுவலரும் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியருமான புண்ணிய கோட்டி தலைமை வகித்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை  கொடி யசைத்து துவக்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையிலும், தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தியும் நடைபெற்ற பேரணியில் நகராட்சி ஆணையர் (பொ ) இளங்கோவன், தாசில்தார் லட்சுமி பிரபா, தேர்தல் பிரிவு துணை  தாசில்தார் இளங்கோவன், ஆர் ஐ மனோகரன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் விஜயகுமார், ஆகியோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் வாக் களிப்பதன் அவசியம், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி வந்தனர். ராஜகோபால சுவாமி கோயில் அருகில் இருந்து துவங்கிய வாக்காளர் விழிப் புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.  பின்னர் பேரணியில் பங்கேற்ற அனைவரும்  வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags : Voter awareness rally ,Mannar ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி