×

பிரமோற்சவ விழாவையொட்டி காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தெப்ப திருவிழா

காரைக்கால், மார்ச் 26:  காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் பிரமோத்சவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் (24ம்தேதி) இரவு தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேதகைலாசநாதர் கோயில் பிரமோத்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 20ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 12ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற்றது. தெப்பத்தில், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. விழாவில், கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, காரைக்கால் அம்மையார் கோயில் மணிமண்டபத்தில் காரைக்கால் அம்மையார் ஐக்கிய இசை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Tags : Karaikal Kailasanathar ,festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...