×

தொண்டர்களுக்கு பெட்ரோல் டோக்கன் வழங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சீர்காழி, மார்ச் 26:  சீர்காழியில் அதிமுகவினர் வழங்கிய பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி ஆபத்துகாத்த விநாயகர் கோயிலில் இருந்து நேற்று முன்தினம் காலை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிரசாரத்தை தொடங்கினர். அப்போது பைக்கில் பிரசாரத்தில் கலந்து கொள்ள வந்த தொண்டர்கள் 250 பேருக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல் போட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனை எடுத்து கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு தொண்டர்கள் சென்று பெட்ரோல் நிரப்பி சென்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன் போலீசார் சுகுமார், பன்னீர்செல்வம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பெட்ரோல் போட கொடுத்த 200 டோக்கன்களையும், ரூ.10,870 பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மண்டல துணை தாசில்தார் இதுகுறித்து சீர்காழி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி (50), பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கராசு (50), தினேஷ்குமார் (40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,AIADMK ,volunteers ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...