×

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் மறைக்கப்படாத முதல்வரின் படங்கள் தேர்தல் அலுவலர்கள் பாரபட்சம்

நாகை, மார்ச் 26: கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை மறைக்கப்படாமல் உள்ளது. இதில் தேர்தல் அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதால் அரசியல் கட்சி
யினர் புகார் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அரசு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல்  அதிகாரிகள் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தை மையமாக வைத்துதான் செயல்படுகிறார்கள்.  தற்போது நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால்  கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதலவர் பழனிச்சாமி படங்கள் மறைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் பல்வேறு அரசியல் கட்சியினர் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும், எழுத்து பூர்வமாகவும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த தட்டியில் உள்ள தலைவர்கள் படங்களை மறைக்காமல் உள்ளது. இதேபோல் கீழ்வேளூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் படத்தை அகற்றாமலும், மறைக்காமலும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சியினர் வைத்துள்ள தட்டிகள், கொடிகம்பங்களை அகற்ற உத்தரவிட்டு அகற்றி வருகிறது. ஆனால் கீழ்வேளூர் பகுதியில் உள்ள அரசு விளம்பரங்கள், தலைவர்கள் படங்களை மட்டும் விதி விலக்கு கொடுத்து அழிக்காமல் உள்ளது.  இதுதேர்தல் அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கை என்று பல்வேறு கட்சிகள் கூறி வருகின்றனர். தேர்தல் அதிகரிகள் ஆளும் ஆட்சிக்கு ஆதரவாக இல்லாமல் நடு நிலையோடு செயல்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : office ,election officials ,Kilaveloor Thalilthar ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...