×

பாலிடெக்னிக் ஆண்டு விழா

கோவில்பட்டி, மார்ச் 26:  கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 35வது ஆண்டு விழா நடந்தது.  விழாவிற்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல் தலைமை வகித்தார். வேதியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் அம்புஜராஜன் வரவேற்றார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் இன்பராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். கோவை எல்.ஜி.எக்யூப்மெண்ட்ஸ் நிறுவன முதுநிலை மேலாளர் வீரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பல்வேறு ஆலோசனைகள், தொழிற்சாலைகளில் இன்றைய எதிர்பார்ப்புகள், மாணவர்களின் எதிர்கால மேம்பாடு பற்றி பேசினார். கல்லூரியில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் செண்பகராமன் மற்றும் சிறந்த என்எஸ்எஸ் திட்ட மாணவராக தேர்வு செய்யப்பட்ட இரண்டாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் முருகேஷ் ஆகியோரை பாராட்டி வெள்ளிபதக்கம் வழங்கப்பட்டன.  தொடர்ந்து ஒவ்வொரு பருவதேர்விலும் முதல் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. இயந்திரவியல் துறை விரிவுரையாளர் தங்கராஜ் நன்றி கூறினார். கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணப்பன், மதிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை இயக்குநர் அருணாசலம் ஆலோசனையின்படி கல்லூரி முதல்வர், துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Tags : Polytechnic Anniversary ,
× RELATED ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் ஆண்டு விழா