×

செஞ்சுருள் சங்க கூட்டம்

கோவில்பட்டி, மார்ச் 26:  கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி செஞ்சுருள் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் சார்பில் செஞ்சுருள் சங்க கூட்டம் நடந்தது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நடந்த இக்கூட்டத்தில் மருத்துவமனையின் நம்பிக்கை மைய ஆலோசகர்கள் செஞ்சுருள் சங்க தொண்டர்கள் இடையே ஹெச்ஐவி குறித்தும், அந்நோய் பரவும் வழிகள் பற்றியும், நம்பிக்கை மைய செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடினர். தொடர்ந்து நம்பிக்கை மைய ஆய்வக நுட்புனர் ரேவதி ஹெச்ஐவி பரிசோதனை பற்றி செயல்விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி தலைமையில் செஞ்சுருள் சங்க பொறுப்பாளர் கவிதாமஞ்சு மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.



Tags : Censor board meeting ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்