×

கனிமொழி வேட்பு மனு தாக்கல் பேரணியில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு

தூத்துக்குடி,மார்ச் 26: தூத்துக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரணியில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.தூத்துக்குடியில் நேற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்காக அவர் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக வந்தார். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து துவங்கிய பேரணி விவிடி சிக்னல், பாளை ரோடு, வேம்படி இசக்கியம்மன்கோவில், வஉசி கல்லூரி வழியாக வந்தது. இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவி சண்முகம், மாவட்ட தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் அழகுமுத்துபாண்டியன், இயூமுலீக் மாவட்ட தலைவர் மீராசா,  திக மாவட்ட தலைவர் பெரியாரடியான், சமகழகம் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர்பிஸ்மி, விசிக அகமது இக்பால், மநேமக மோத்தி, மநேஜக ஜாகிர்உசேன்,  ஐஜேக துரை பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை செண்பகராஜ், ஆதித்தமிழர் கட்சி சங்கர், வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாணவரணி அமைப்பாளர் ஜாண்அலெக்சாண்டர், துணை அமைப்பாளர் பாலகுருசாமி,  மாவட்ட இளைஞரணி மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மகளிரணி கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் சிஎஸ்.ராஜா,  கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன்,  சுரேஷ்குமார்,  மாநரக இளைஞரணி ஆனந்தகேப்ரியேல்ராஜ், செல்வின், ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்,

 தெற்கு மாவட்டம் சார்பில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே. ஜெகன், துணை அமைப்பாளர் ராமஜெயம்,  வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜேஷ்ரவிச்சந்தர், மீனவரணி ரீகன், மாணவரணி ரமேஷ், நிர்மல், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ஜோசப், பார்த்திபன், ரமேஷ், நவீன்,  பரமன்குறிச்சி செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டவர்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பேரணி குறித்து தகவலறிந்த எஸ்பி முரளிரம்பா, ஏடிஎஸ்பி பொன்ராம், டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்தனர். அப்போது அவர்களிடம் கீதாஜீவன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று அனுமதி கோரினர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதியளிக்க மறுத்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு செல்ல கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கினர். இதனையடுத்து வேட்பாளர் கனிமொழி கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags : rally ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி