×

உதவி கலெக்டர் பணிக்கு தேர்வான ஆசிரியைக்கு பாராட்டு

கோவில்பட்டி, மார்ச் 26:  கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றத்தின் 39வது மாதாந்திர கூட்டம் நடந்தது.   பத்மா மருத்துவமனை டாக்டர் பத்மாவதி தலைமை வகித்தார். சாத்தூர் கல்லூரி உதவி பேராசிரியை லதா முன்னிலை வகித்தார். மன்ற காப்பாளர் சேர்மதுரை வரவேற்றார். மன்ற காப்பாளர் வெள்ளைச்சாமி அறிக்கை வாசித்தார்.   பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ‘வாங்க பேசலாம்’ எனும் தலைப்பில் பேசினர். இதையடுத்து குரூப்-1 தேர்வு மூலம் உதவி கலெக்டர் பணிக்கு தேர்வாகியுள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அனிதாவை பாராட்டியும், நகைக்சுவை உரையாற்றிய மாணவ, மாணவியர் மற்றும் கண்களை மூடி பேப்பரில் உள்ள கலரை தனது நுகர்வு மூலம் கண்டுபித்து சாதனை செய்த தூத்துக்குடி மாணவி ரோஷினியை பாராட்டி பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பரிசு வழங்கினர். மன்ற நிறுவனர் வெங்கடேஷ், லதா வெங்கடேஷ், மன்ற இயக்குநர்கள் காளிதாஸ், ஜான்கணேஷ், காப்பாளர்கள் துரைராஜ், ஹரிகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்ற காப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.


Tags : teacher ,Assistant Collector ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...