×

மீன் வியாபாரிகள் டிஎஸ்பியிடம் முறையீடு

சிதம்பரம், மார்ச் 26:  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளத்தில் மீன் வியாபாரம் செய்ய பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் மீன் வியாரிபாரிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2006ம் ஆண்டு முதல் அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளத்தில் சுருக்குவலை மீன் எடுத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்த மீன்பிடி இறங்குதளத்தில் எம்ஜிஆர் திட்டு, முழுக்குத்துறை, கிள்ளை, சி.புதுப்பேட்டை, தேவனாம்பட்டினம், தாழங்குடா, நரம்பை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் மீன்களை வாங்கி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பி வருகிறோம். இங்கு வியாபாரம் நடந்தால் பரங்கிப்பேட்டை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் பயன் அடைந்து வந்தனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனை நம்பி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இங்கு எந்தவித வியாபாரமும் நடப்பதில்லை. அதற்கு காரணம் புதுகுப்பம், சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன் விற்க கூடாது என்று தடுக்கிறார்கள். அடிக்கடி இரவு நேரத்தில் சிலர் இருசக்கர வாகனங்களில் வந்து அச்சுறுத்துகின்றனர். பரங்கிப்பேட்டை தவிர மற்ற எல்லா ஊர்களிலும் மீன் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். பரங்கிப்பேட்டையில் மட்டும் எங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. ஆகையால் பரங்கிப்பேட்டை பகுதியில் மீன் வியாபாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags : Fish traders ,
× RELATED மீன் வியாபாரிகள் இடையே தகராறு