×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, மார்ச் 26: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் வருவாய்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என  வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு  பிரசார உக்திகளை கையாண்டு வருகிறது.இந்நிலையில் ஊத்துக்கோட்டை வருவாய்துறை சார்பில் கன்னிகைபேர் கிராமத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில், கன்னிகைப்பேர் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை வருவாய் ஆய்வாளர் யுகேந்தர், பென்னலூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு  அழைப்பாளராக மண்டல துணை வட்டாட்சியர் பாரதி, தலைமை எழுத்தர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். இந்த பேரணி கன்னிகைப்பேரில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.  அப்போது பொது மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...