×

திருவள்ளூர் தொகுதிக்கு காங்கிரஸ் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல்

திருவள்ளூர், மார்ச் 26: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, பகுஜன் சமாஜ், நாம் தமிழர், இந்திய குடியரசு கட்சி, தேச மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட கடந்த 22ம் தேதி வரை 7 பேர் மனு தாக்கல்  செய்திருந்தனர். நேற்று காங்கிரஸ், அதிமுக என அங்கீகரிக்கப்பட்ட இரு கட்சி வேட்பாளர்கள், இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் என 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.கட்சி வேட்பாளர்கள் மாற்று வேட்பாளர்கள் என நேற்று  வரை மொத்தம் 17 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர் அன்புச்செழியன் 4 மனுக்களையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றிச்செல்வி ஒரு மனு, மாற்று வேட்பாளர் சிந்துஜா 2 மனுக்களையும்,  காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் 2 மனுக்களையும், அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் 2 மனுக்கள், அவரது மகள் பினு மாற்று வேட்பாளர் என மொத்தம் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது.  நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 29ம் தேதி மாலை தேர்தல் களத்தில் இறங்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Tags : Thiruvallur ,constituency ,nominees ,Congress ,
× RELATED கடம்பத்தூர் ஒன்றியத்தில் வாக்கு...