×

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சந்திப்பு

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயவர்தன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி  நேற்று காலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தை ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நன்மங்கலம் ஊராட்சி பகுதியில் மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் கற்கும் சூழ்நிலை இருந்தது. இதனால் எம்பி மேம்பாட்டு நிதி மூலம் இருக்கை வசதிகள் செய்து தந்தேன். மேலும் ஊராட்சியில் உள்ள அனைத்து  பள்ளிகளிலும் இருக்கை வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலாங்கரையில் செயல்பட்டு வந்த பகுதி நேர தபால் நிலையம் மூடப்படும் நிலையை மாற்றி, எனது முயற்சியால் முழு நேர தபால் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது. சித்தாலப்பாக்கம், ஒக்கியம்பாக்கம் பகுதியில் புதிய தபால்  நிலையங்கள் உருவாக்கப்பட்டு, பெரும்பாக்கம் மற்றும் உள்ளகரத்தில் புதிய தபால் நிலைங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தொகுதியின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தொடர்ந்து முதல்வரை வலியுறுத்தியதால், ஆற்காடு சாலை-வடபழனி கோயில் சந்திப்பு மேம்பாலம் பணிகள் முடிவுற்ற  மேடவாக்கம் சந்திப்பிலும், விஜயநகர் பேருந்து இறுதி கட்டத்திலும், பெருங்குடியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை பாதுகாக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தியும் வனத்துறை அமைச்சரை வலியுறுத்தியும், முதல்வரை வலியுறுத்தியும் ரூ.25 கோடி நிதி பெற்று பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல  ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அமைச்சர்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.இவ்வாறு ஜெயவர்தன் கூறினார்.

Tags : Vijayakanth ,AIADMK ,Jayawardene ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...