×

செங்கம் அருகே வாகன உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற 6.22 லட்சம் பறிமுதல் சோதனை பறக்கும் படையினர் அதிரடி

செங்கம், மார்ச் 26: செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை நடத்திய சோதனையில் காரில் எடுத்துச்சென்ற ₹6.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு பகலாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், அத்தனூர் கிராமத்தில் செங்கம் பறக்கும் படை தாசில்தார் காமராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து செங்கம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் ₹1.39 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து, காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில், பெங்களூருவை சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்வது தெரியவந்தது. தொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் செங்கம் தாசில்தார் பாரத்தசாரதியிடம் ஒப்படைத்தனர். அப்போது பணத்திற்கான உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்லலாம் என்று தெரிவித்தனர். இதேபோல், தானிப்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணமின்றி வைத்திருந்த ₹4 லட்சத்து 83 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...