×

ஆரணி, திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஆரணி, மார்ச் 26: ஆரணி, திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆரணி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் நேற்று ஆர்டிஓ அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் ஆர்டிஓ மைதிலியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.சிவானந்தம், காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் இருந்தனர். மாற்று வேட்பாளராக அவரது தந்தை கிருஷ்ணசாமி மனுதாக்கல் செய்தார். இவர்கள் தவிர நேற்று சுயேட்சையாக 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.

பின்னர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், இந்த தேர்தலில் விஷ்ணுபிரசாத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற செய்திதான் முதலில் வர இருக்கிறது. மாநில அரசின் அதிருப்தியும், மத்திய அரசின் நாடக ஆட்சியையும் ஒழிப்பதற்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்’ என்றார். தொடர்ந்து விஷ்ணுபிரசாத் கூறுகையில், `இந்த தொகுதியில் செய்ய வேண்டிய திட்டங்கள் அதிகளவில் உள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை என்பது ஆரணி தொகுதி மக்களின் முகத்தில் நன்றாக பிரதிபலிக்கிறது. நான் வெற்றி பெற்றால் ஆரணி மக்களின் நீண்ட நாள் கனவான பட்டு பூங்காவை அமைத்து தருவவேன். கிடப்பில் உள்ள திண்டிவனம்- நகரி ரயில் பாதை பணியை விரைவுபடுத்துவேன்'' என்றார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் கூறுகையில், ‘திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.

தொடர்ந்து, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், `திருவண்ணாமலை மக்களவை தொகுதி பொறுத்தவரையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்பதை உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மனு தாக்கல் செய்யாதவர்கள் இன்று அதிகளவில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமற்ற பைப்லைன் அமைக்கும் குத்தகைதாரர்

Tags : Arani ,Congress ,AIADMK ,constituency ,Thiruvannamalai Lok Sabha ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...