×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பள்ளி அருகே கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் மாணவர்கள் அவதி

காரியாபட்டி, மார்ச் 22: காரியாபட்டி அருகே பள்ளியின் பக்கத்தில் வீசப்படும் கோழிக்கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் கோழிக்கடைகள் அதிகரித்து வருகின்றன. கோழிக்கடை கழிவுகளை பேரூராட்சியின் பின்பு உள்ள அரசு பள்ளியை ஒட்டி கொட்டிவிடுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுவிடுகிறது. தினமும் அதே இடத்தில் கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளியின் பின்பு சின்னக்குளம் ஊரணி உள்ளது. இதில் மல்லாங்கிணறு பேரூராட்சி போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கி வருகின்றனர். இதில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிப்பறை கழிவுகளையும் சாக்கடை கழிவுகளோடு சேர்த்துவிட்டு விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் குடியிருக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் சாக்கடையால் குடிநீரும் அசுத்தமாக மாறி வருகிறது.

அதேபோல் பெருமாள்கோவில் அருகில் ஓடையிலும், சாலையிலும் கோழிக்கழிவுகளை கொட்டுவதோடு, திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர்.  கோவிலுக்கு சாமி கும்பிட போவோர் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. இதனால் நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை என்று பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மகேந்திரன் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக கோழிக்கழிவுகளை பள்ளிக்கு பின்பு அப்படியே கொட்டிவிடுகின்றனர். இந்த கழிவுகளால் ஒரு கிமீ தூரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சுகாதாரத் துறையும்,  மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலை நீடிக்குமானால் மக்களை திரட்டி போராடவும் தயாராக உள்ளோம்’’ என்றார்.

ரமேஷ்பாபு கூறுகையில், ‘‘சின்னக்குளம் ஊரணி மிகப்பழமையானது. இந்த ஊராணி கரையில்தான் அரசு பள்ளி உள்ளது. எனது மகன் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறான். தொடர்ந்து கொட்டப்படும் கோழிக்கழிவுகள் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலமுறை அவதிப்பட்டுள்ளான். அரசு அதிகாரிகளிடமும், பேரூராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அடுத்த இதனால் அடுத்த கல்வி ஆண்டில் பிள்ளைகளின் சேர்க்கை குறையும் அபாயம நிலவுகிறது’’ என்றார்.

Tags : Jyotitha Ratna ,KP Vidyadharan School ,
× RELATED ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்...