×

ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் மிஸ்ஸிங்

தேனி. மார்ச் 22 : தேனி எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக பெரியகுளம் வேட்பாளர் முருகன் கலந்து கொள்ளாது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் நேற்று முன்தினம் நடந்தது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசினர். கூட்டத்தில் தேனி எம்.பி தொகுதி வேட்பாளர் ஓ.ப.ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் அறிமுக படுத்தப்பட்டனர். இக்கூட்டத்திற்காக அதிமுக. சார்பில் நகர ஒன்றிய, பேரூர், கிளைக் கழகம் மூலமாக நபர் ஒருவருக்கு ரூ.300 கொடுத்து கூலிக்கு ஆண்கள் 1 பெண்களை கூட்டி வந்து மேடை முன்பு அமர்த்தி இருந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே சொல்லி கூட்டி வந்த நேரம் முடிந்து விட்டதாக அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளர் தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து கலைந்தனர். இதனை பார்த்த மாவட்ட செயலாளர் சையது கான் ஓபன் மைக்கிலேயே, அதிமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் 14 ேபரும் கூட்டத்திற்கு நடுவே சென்று அழைத்து வந்த கூட்டம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துங்கள். வந்திருக்கும் அனைவருக்கும் மேடைக்கு பின்னால் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 இதனை கேட்டதும் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் உணவு வாங்க மேடைக்கு பின்னால் சென்றனர். இட்லி, கேசரி என வழங்கப்பட்ட உணவை பெற கூலித் தொண்டர்கள் . முண்டியடித்தனர். இதனால் கூட்ட மேடைக்கு முன்பாக நாற்காலிகள் வெறிச்சோடின.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது நூற்றுக்கணக்கான வாகனங்களில் கூலித் தொண்டர்களை அழைத்து வந்ததை தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முருகன் வரவில்லை. இவருக்கு பதில் வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார் என பரவலாக பேசி வரும் நிலையில் அறிவிக்கப்பட்ட பெரியகுளம் வேட்பாளர் மிஸ்சிங்காக இருந்தது கட்சியினருடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : candidate ,AIADMK ,meeting ,OBC ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்