×

அடிப்படை வசதி செய்யாவிட்டால் மலைகளில் குடியேறுவோம்

வருசநாடு, மார்ச் 22: தாழையூத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் மீண்டும் மலைகளில் குடியேறுவோம் என்று மலைவாழ் மக்கள் எச்சரித்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட தாழையூத்தில் மலைவாழ் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் அரசு தரப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை தேவையும் இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால் நாங்கள் மீண்டும் மலைகளில் குடியேற இருப்பதாக மலைவாழ் மக்கள் கூறினர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `` ஏற்கனவே பலமுறை அரசு அதிகாரிகளிடமும் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரையும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தற்போது நாங்கள் தேனெடுத்தல், கிழங்குபறித்தலை குலத்தொழிலாக செய்து வருகிறோம், தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் தேன் எடுக்கும் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் நாங்கள் கிராமங்களை காலிசெய்துவிட்டு மலையில் குடியேறும் நிலை ஏற்படும். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facilities ,mountains ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...