×

ஆண்டிபட்டியில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

ஆண்டிபட்டி, மார்ச் 22: ஆண்டிபட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் மேல ஓடைத் தெருவில் உள்ள முனியாண்டிகோயிலில் துப்புரவு வாய்க்கால் மற்றும் முல்லைப் பெரியாறு வாய்க்கால் இணைப்பு திட்டம் போராட்ட குழுவும், அனைத்து விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட விவசாய சங்க தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து மாவட்ட விவசாயி சங்கத் தலைவர் சின்னசாமி கூறுகையில், `` வறண்டுள்ள விவசாய நிலங்களுக்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து பைப் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் திட்ட அறிக்கையினை விவசாயிகளே தயார் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரிடம்நேரில் வழங்கினோம். தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்த முல்லை பெரியாறு பைப் லைன் திட்டம் வரவில்லை. எனவே, விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடிகட்டி தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம்’’ என்று தெரிவித்தார்.

Tags : Farmers Association Consulting Council ,Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி