×

திருப்பாச்சேத்தியில் வாகனசோதனையில் ரூ.85 ஆயிரம் சிக்கியது


திருப்புவனம், மார்ச் 22: திருப்பாச்சேத்தியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.85 ஆயிரம் சிக்கியது.திருப்பாச்சேத்தி டோல்கேட் அருகே  நேற்று காலை  பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற வாகனத்தை சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் லியோன் என்பவரிடமிருந்து ரூ. 85ஆயிரத்தை கைப்பற்றினர். லியோன் தனது பழுதான படகுக்கு மாற்று உபகரணங்கள் வாங்குவதற்காக மதுரைக்கு செல்வதாக கூறினார். அதற்குரிய ஆவணங்களை கொடுத்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு பறக்கும் படை தாசில்தார் செந்தில் வேல் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 85 ஆயிரத்தை சிவகங்கை கருவூலத்தில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இச்சோதனையில் எஸ்.ஐ சோமசுந்தர பாரதி உடனிருந்ததார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்