×

தேர்தல் தேதி அறிவிப்பால் களையிழந்த சித்திரை திருவிழா

தொண்டி, மார்ச் 22: தொண்டி பகுதியில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் களை இழந்து காணப்படுகிறது.தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும், கலைநிகழ்ச்சிகள் அன்னதானம் என களைகட்டும். இம்முறை தேர்தலும் திருவிழாவும் ஒரே நாளில் வருவதால் போலீசார் ஏகப்பட்ட கெடுபிடி விதித்துள்ளனர். இதனால் கிராமங்களில் இந்த வருடம் சித்திரை திருவிழா களை இழந்துவிட்டதாக பொது மக்கள் கூறுகின்றனர்.தொண்டி அருகே உள்ள நம்புதாளை பதினெட்டாம்படி கருப்பர் கோயில் சுற்றுவட்டார மக்களின் குலதெய்வ கோயிலாகும். இங்கு வருடம் தோரும் சிதிரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி அன்று பூக்குழி விழாவும் முதல் நாள் இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இம்முறை தேர்தல் அன்று திருவிழாவும் வருவதால் வெளியூரில் இருப்பவர்கள் அதிகமாக வர வாய்ப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் கலைநிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் மைக் செட் அனுமதி என அனைத்திற்கும் கெடுபிடி விதித்துள்ளனர். இதனால் அஞசுகோட்டை, கண்ணாரேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தல் ஏராளமான கிராமங்களில் இம்முறை திருவிழா எப்படி நடத்துவது என கவலையுடன் உள்ளனர். தேர்தல் நடைமுறையை காரணம் காட்டி தொன்று தொட்டு நடந்து வரும் முறையை மாற்ற சொல்வதாக பொதுமக்கள் அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கின்றனர்.பூத்கமிட்டிக்கு கூட ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. திருவிழா அன்று கோயிலில் இருப்பதா பூத் கமிட்டியில் இருப்பதா என யாரும் வர மறுப்பதாக கட்சியனர் புலமபுகின்றனர். வெளியூரில் வசிப்போர் வருடத்திற்கு ஒரு முறைதான் இதுபோன்ற கோயில் திரவிழாவிற்கு வருவார்கள். அவ்வாறு வந்துவிட்டால் அங்கே வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இம்முறை சரியாக திருவிழா அன்றே தேர்தல் வந்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் மாலை வரையிலும் விஷேசம் நடைபெறும். இதனால் வாக்கு சதவீதம் குறையும் என்பதில் ஐயமில்லை.

Tags : Chittilanantha Chitti Festival ,
× RELATED உலக புத்தக தின விழா