×

அரசியல் கட்சியினர் பிரச்சாரத்திற்கு 72 இடங்கள் அனுமதி

சிவகங்கை, மார்ச் 22: சிவகங்கை மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்த குறிப்பிட்ட இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில், சிவகங்கை அரண்மனை வாசல், ராமச்சந்திர பூங்கா, நாட்டரசன்கோட்டை, மலம்பட்டி, சாத்தரசன்கோட்டை, மதகுபட்டி, பாகனேரி, காளையார்கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகில், வாரச்சந்தை அருகில், சிப்காட், திருப்புவனத்தில் சந்தை திடல், பூவந்தி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காரைக்குடி மகர்நோன்பு பொட்டல், ஐந்து விளக்கு, குன்றக்குடி, புதுவயல், கண்டனூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், கோவிலூர், தேவகோட்டை அண்ணா அரங்கம் சிலம்பனி, ராம் நகர், புலியால், முப்பையூர், சருகணி சந்திப்பு, சருகணி பஸ் ஸ்டாப், அனுமந்தக்குடி, சண்முகநாதபுரம், திருவேகம்பத்து, கல்லல் ஆகிய இடங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திருப்பத்தூர் சீரணி அரங்கம், சீதளி வடகரை ஆகிய இரண்டு இடம், வேலங்குடி, மானகிரி, திருக்கோஷ்டியூர், கீழச்சீவல்பட்டி இரண்டு இடம், பட்டமங்கலம், தெக்கூர், நெற்குப்பை, காளாப்பூர், சிங்கம்புணரி இரண்டு இடம், எஸ்.எஸ்.கோட்டை, மல்லாக்கோட்டை, ஏரியூர், எஸ்.புதூர், உலகம்பட்டி, புழுதிப்பட்டி, பூலான்குறிச்சி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய ஐந்து போலீஸ் சப் டிவிசன்கள் உள்ளன. ஏற்கனவே பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்த சிவகங்கையில் 12 இடங்கள் நிரந்தரமாகவும் தற்காலிகமாக 6 இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. காரைக்குடியில் நிரந்தரமாக 5, தற்காலிகமாக 12, திருப்பத்தூரில் நிரந்தரமாக 12, தற்காலிகமாக 8, தேவகோட்டையில் நிரந்தரமாக 7, தற்காலிகமாக 3, மானாமதுரையில் நிரந்தரமாக 4, தற்காலிகமாக 3 இடங்கள் என மொத்தம் நிரந்தரமாக 40, தற்காலிகமாக 32 இடங்கள் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் நடத்த ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Tags : parties ,campaign ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...