×

மூன்று நாட்களில் 2 பேர் மட்டுமே மனு தாக்கல் மந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதி


ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் ஆகியள்ள நிலையில் இரண்டு பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். முக்கிய கட்சிகளான திமுக கூட்டணி, அமமுக வேட்பாடளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முற்போக்கு சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் லோகநாதன் நேற்று மனுத்தாக்கல் செய்தார். மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19, தொடங்கிய நிலையில், மூன்றாவது நாளான நேற்று முற்போக்கு சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த லோகநாதன் மனுத்தாக்கல் செய்தார்.  சென்னையைச் சேர்ந்த லோகநாதன் (41) கடந்த 2014ம் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டவர். யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திருமணமாகவில்லை. வெற்றி பெற்றால் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பிரச்னையை தீர்க்கும் வகையில் பாடுபடபோவதாக தெரிவித்தார்.

Tags : constituency ,Ramanathapuram ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு