×

நயினார்கோவில் பகுதியில் தலை விரித்தாடும் குடிநீர் பஞ்சம் பல மணி நேரம் காத்திருக்கும் பெண்கள்

பரமக்குடி, மார்ச் 22: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சியில் குடிநீருக்காக பல மணிநேரம் காத்திருக்கும் பெண்கள், எதைபற்றியும் கண்டுகொள்ளாதா ஊராட்சி நிர்வாகம். குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதசுவாமி கோயில் இங்கு உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் இல்லாமல் குடியிருப்பவர்கள் மற்றும் பக்தர்கள் பணம் கொடுத்து தாகம் தீர்த்து வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சியால் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆண்களும், பெண்களும் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று கூட்டுக்குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை பிடித்து தாகத்தை தீர்த்து வருகின்றனர். பெண்கள் நயினார்கோவிலிலிருது 5 கி.மீ. தூரம் நடந்து சென்று சமத்துவபுரத்தின் அருகே உள்ள கூட்டுக்குடிநர் குழாயின் வால்வில் இருந்து வரும் தண்ணீரை பிடிக்க இரவு பகல் பாராமல் பல மணிநேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து வருருகின்றனர். ஊராட்சி மூலம் கடந்த 6 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் 1 மணிநேரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால், குடிக்க தண்ணீர் இல்லாமல் மற்ற வேலைகளை விட்டுவிட்டு 3 கி.மீ. நடந்து சென்று காவிரி கூட்டுக் குடிநீர் வால்வு தொட்டிகளில் விழும் தண்ணீரை பிடித்து வருகின்றனர். வேறு வழியின்றி வண்டியில் வரும் தண்ணீரை ரூ.6 முதல் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்காக காத்திருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல், வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் கூட்டுக்குடிநீர் வால்வுகளில் கசியும் தண்ணீருக்கு பல மணிநேரம் காத்திருந்து 3 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Women ,region ,Ninegarh ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது