×

மதுரை மாநகராட்சி வளாகத்தில் மரங்கள் அடியோடு வெட்டி சாய்ப்பு

மதுரை, மார்ச் 22: மதுரை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இருந்த மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. மதுரை மாநகராட்சி மைய அலுவலகம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு 3 மாடி கொண்ட கட்டடம் உள்ளது. இங்கு தான் மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் பங்கேற்கும் மாமன்ற கூட்டம் நடைபெற்று மதுரையின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இங்கு மரங்கள் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கின்றன. இந்நிலையில் ெஜயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட மரங்களை அப்போதைய மேயர் ராஜன்செல்லப்பா நட்டு வைத்தார். இதன் பின்னர் மாநகராட்சி வளாகம் நிழல் தரக்கூடிய மரங்கள் அமைந்த பசுஞ்சோலையாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் திடீரென மாநகராட்சி வளாக சுற்றுச்சுவர் பகுதியில் இருந்த ராட்சத மரங்கள், அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. இதற்காக மரம் அறுக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் துணையுடன் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் நிழல் தந்த மரங்கள் ெவட்டப்பட்டதால் அந்த பகுதியில் வெயில் மண்டையை பிளந்து வருகிறது. இதுகுறித்து மரங்கள் வெட்டியவர்களிடம் கேட்டபோது, எதற்காக என்பது எங்களுக்கு தெரியாது. வெட்டச்சொன்னார்கள், அதற்காக கூலி தருகின்றனர். நாங்கள் வெட்டும் பணியை மேற்கொண்டோம் என முடித்துக்கொண்டனர்.

Tags : complex ,Madurai Corporation ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...