×

ஆபத்தை உணராமல் நெல் நாற்றுடன் வாகனங்களை மறிக்கும் விவசாய தொழிலாளர்கள்

திருமங்கலம், மார்ச் 22: நான்குவழிச்சாலையில் வாகனங்களால் ஆபத்தை உணராமல் நெல்நாற்று கட்டுடன் பணம் கேட்கும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பரிதாபநிலை பார்போரிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம பகுதிகளில் வாகனத்தில் செல்லும் போது நெல்நாற்றுடன் சிறுவர்கள், பெண்கள் சிலர் நின்று நாற்றுநடவு செய்யப் போவதாக கூறுவர். வாகனத்தில் செல்வோரும் சில்லறைகளை அவர்களிடம் கொடுத்து செல்வர். இதன் மூலமாக விவசாயத்தினை மதிக்கும் பண்பு என கிராமத்து பெரியவர்கள் கூறுவர். ஆனால் இந்த பழக்கம் தற்போது காசு பார்க்கும் ஆசையை பலரிடம் துாண்டிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமசாலைகளில் வயல் ஓரங்களில் நின்று நெல்நடவு செய்யும் போது நாற்றுடன் சில்லறை கேட்ட நிலை மாறி இன்று நான்குவழிச்சாலையில் மின்னல்வேக வாகனங்களை வழிமறித்து ஒருசிலர் நெல்நாற்றுடன் காசுகேட்கும் நிலை திருமங்கலம் பகுதியில் அதிகரித்துள்ளது. இது விபத்துக்கு வழிவகுக்கும் என்பது கூட தெரியாமல் சிலர் நாற்றுடன் நான்குவழிச்சாலையில் வாகனங்களை மறித்து காசுகேட்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதுடன் விபத்திற்கும் வழிவகுக்கிறது. பார்போரை பதறசெய்யும் அனுதாபத்ததையும் உண்டாக்கி வருகிறது. ஆனால் இது விபத்தினை ஏற்படுத்தும் என்பதால் வாகன ஓட்டிகள் இது போன்ற செயல்களுக்கு நான்கு வழிச்சாலையில் தடைவிதிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தொடர்நது இதுபோல் நான்குவழிச்சாலையில் காசுசம்பாதிக்க முயல்வோர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்