×

எரியோடு அருகே குடிநீர் கோரி குடங்களுடன் மறியல்

வேடசந்தூர், மார்ச் 22: குடிநீர் கோரி எரியோடு அருகே கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எரியோடு பேரூராட்சிக்குட்பட்டது கொடிக்காபட்டி. இங்கு சுமார் 250 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லை. மேலும் இவ்வூர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். மேலும் எம்பி, எம்எல்ஏவிடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று மதியம் 12 மணியளவில் எரியோடு அரசு பள்ளி முன்பாக வேடசந்தூர்- வடமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் பேரூராட்சி செயல்அலுவலர் ராஜசேகரன், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர், சாலை வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Eriyad ,
× RELATED பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த...