கொடைக்கானல் அருகே காட்டுக்குள் செல்ல மறுக்கும் யானைகள் பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் கவலை

கொடைக்கானல், மார்ச் 22: கொடைக்கானல் அருகே காட்டுயானைகள் ஒருவாரமாக முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் அருகே கூம்பூர் வயல், பில்லூர் எஸ்டேட் பகுதிகளில் பீன்ஸ், அவரை, சவ்சவ் போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் முகாமிட்டு பயிர்களை அழிதது வருகின்றன. வனத்துறையினர் தொடர்ந்து விரட்டியும் யானைகள் தோட்டப்பகுதிகளை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இரவுநேரங்களில் யானைகள் கிராமத்து பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் கூம்பூர் வயல் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள் விவசாயிகளின் வீடுகளை இடித்து தள்ளின. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: