×

நிலக்கோட்டைக்கு சென்ட் தொழிற்சாலை திமுக வேட்பாளர் உறுதி

செம்பட்டி, மார்ச் 22: நிலக்கோட்டையில் பூ விவசாயிகள், வியாபாரிகள் நலனை காக்கும் வகையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். செம்பட்டியில் பிரசாரம் செய்த அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘40 பாராளுமன்ற தொகுதிகளிலும், நிலக்கோட்டை உள்பட 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மாநில துணை செயலாளர் ஐ.பெரியசாமி உத்தரவின்படி நிலக்கோட்டை தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன். குறிப்பாக குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, கழிப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். நிலக்கோட்டையில் பூ விவசாயிகள், வியாபாரிகள் நலனை காக்கும் வகையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். நிலக்கோட்டையில் பூக்களை கெடாமல் வைக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும்.  அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவை, திருப்பூருக்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்கள் நலத்திட்ட பணிகள் செய்து கொடுக்கப்படும்’ என்றார்.

Tags : DMK ,Candidate ,Stage Counter ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு