திண்டுக்கல்லில் ஸ்மார்ட் ஈவன்ட் கல்வி கண்காட்சி 2 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

திண்டுக்கல், மார்ச் 22: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக ஸ்மார்ட் ஈவன்ட் நடத்தும் 7ம் ஆண்டு கல்வி கண்காட்சி, வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. ஸ்மார்ட் ஈவன்ட் நிறுவன தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கண்காட்சியை சமூகஆர்வலர் நாட்டாமை காஜாமைதீன் துவங்கி வைத்தார். இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியர் சரவணப்பெருமாள், எஸ்எஸ்எம் கல்லூரி முதல்வர் சரவணன், ஏஆர் கல்லூரி சேர்மன் ரகுமான், கண்காட்சி பிஆர்ஓ நாதன் உள்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில் மருத்துவம், வேளாண்மை, இன்ஜினியரிங், கலை அறிவியல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஸ்டால்கள் வைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 முடித்த சுமார் 2 ஆயிரம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டு அடுத்ததாக எந்த கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆலோசித்து சென்றனர். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. கண்காட்சி இன்றும் நடைபெறும்.

Related Stories: